சம்பள உயர்வு, தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து இ.தொ.கா பிரதிநிதிகளுடன் கிழக்கு ஆளுநர் கலந்துரையாடல்

0
184

பதுளை, பசறை, மடூல்சீமை மற்றும் லுனுகல பிரதேசங்களின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர்களுடன் கிழக்கு மாகாண ஆளுநரும் இ.தொ.காவின் தலைவருமான செந்தில் தொண்டமான் பதுளையில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

இக்கலந்துரையாடலில் புதிய சம்பள உயர்வு முன்மொழிவுகள் மற்றும் தற்போதைய தொழிற்சங்க பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் அசோக்குமார், சிவலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கணேசமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள் மற்றும் இ.தொ.காவின் அமைப்பாளர்களும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here