ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பரில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா செல்லத் தயாராக இருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
விஜயத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
புதிய அமைச்சரவை நேற்று (நவம்பர் 18) பதவியேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.