உத்தேச புதிய மின்சார சட்டம் இன்று (20) அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மின்துறையின் உத்தேச மறுசீரமைப்பை செயல்படுத்துவது குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
அத்துடன், அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதிச் சட்டமூலம், தொழில்நுட்பத் தேவைகள், துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல்களின் மூலம் வெளிப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் அபிவிருத்தி நிறுவனங்களிடமிருந்து கிடைத்த ஆதரவு தொடர்பில் மின்சார சபை அதிகாரிகளுக்கும் அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள செயலாக்க கட்டமைப்பு மற்றும் மின் துறையில் முதலீட்டு வாய்ப்புகளை விரைவுபடுத்துவது தொடர்பாக தேவையான சட்டங்களை தயாரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.