68 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட பேரரசர் நெப்போலியனின் தொப்பி!!

0
69

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் தொப்பி 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (சுமார் 68 கோடி இலங்கை ரூபாய்) பிரான்ஸின் பாரிஸில் நடைபெற்ற ஏலத்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.

இந்த தொப்பி 1769 முதல் 1821 வரை பேரரசர் நெப்போலியன் அணிந்திருந்தார்.

பிரெஞ்சுக் கொடியின் நீலம்-வெள்ளை-சிவப்பு வண்ணங்களைக் கொண்ட கருப்பு தொப்பி, உலகெங்கிலும் உள்ள கலை சேகரிப்பாளர்களிடமிருந்து ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்று ஏலதாரர் ஜீன்-பியர் கூறினார்.

ஆனால் தொப்பியை வாங்கிய நபரின் அடையாளத்தை வெளிப்படுத்த ஏலதாரர் மறுத்துவிட்டார்.

இந்த தொப்பி 655000 – 873000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் போகும் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான தொகைக்கு தொப்பி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

நெப்போலியன் போனபார்ட்டிடம் 15 ஆண்டுகளில் இதுபோன்ற 120 தொப்பிகள் இருந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை தற்போது தொலைந்துவிட்டதாகவும் ஏலதாரர்கள் தெரிவித்தனர்.

தொப்பி நெப்போலியன் போனபார்ட்டின் உருவத்தை பிரதிபலிக்கிறது என்றும், தொப்பியின் கடைசி உரிமையாளரான தொழிலதிபர் ஜீன் லூயிஸ் நொய்சிஸ் இறந்துவிட்டார் என்றும் பியர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here