ரணிலை விரட்டி அதிகாரத்தை கைபற்றுவேன் – அநுர சூளுரை

0
113

ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் சவால் விடுத்தால் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பத் தயார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் இல்லை என்று அவர் சவால் விட்டால், அவரையும் விரட்டி விடுவோம் என்று சவால் விடுகிறோம்.

அவருக்கு இரண்டு தெரிவுகள் உள்ளன, ஒன்று அரசியலமைப்பின் படி ஜனாதிபதித் தேர்தலை செப்டம்பர் 17ஆம் திகதிக்கு பின்னர் அடுத்த வருடம் அக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவது.

இல்லையேல் ஜனாதிபதி தேர்தலை நடத்த மாட்டோம் என கூறினால் அவரை வீட்டுக்கு அனுப்ப தயாராக உள்ளோம்.

தன்னை மிகவும் சக்தி வாய்ந்த ஜனாதிபதி என்று கூறிய கோட்டாபயவை இந்த நாட்டு மக்கள் வீட்டுக்கு அனுப்பினர்.

ஆனால் அப்போது அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது அதிகாரத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டம் எதுவும் இல்லை.

அதனால் வேறு வழியின்றி ரணில் ஜனாதிபதியானார். அதை வேறு ஒருவருக்கு கொடுக்க நாங்கள் தயாராக இல்லை. மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வேலைத்திட்டத்துடன் ரணிலை வீட்டுக்கு அனுப்புகிறோம்.

மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here