கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பம்

Date:

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.

அகழ்வுப் பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பமானது.

கடந்த செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 15 ஆம் திகதி வரை முதற்கட்டமாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 17 எலும்புக்கூடுகள், உடைகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில், சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவா, தடயவியல் பொலிஸார், கிராம சேவையாளர் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை

இலங்கையிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்...

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

அத்தனகலு ஓயாவைச் சூழவுள்ள பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த சிறியளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை...

உடனடியாக டொலர் அனுப்புமாறு அமைச்சர் கோரிக்கை

டொலரின் மதிப்பு இன்னும் உயரலாம் என எதிர்பார்த்து வெளிநாட்டு நாணயத்தை வைத்திருக்காமல்,...

200 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிக பலத்த மழை

இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை படிப்படியாக நிலைபெற்று வருகின்றது.  நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில்...