ஊடகத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் பணத்தை அரசியல் நடவடிக்கைகளுக்காக செலவு செய்துள்ளார் என குற்றம் சுமத்தி தற்போதைய அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமல் ரூபசிங்க மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சந்திரபால லியனகே ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு உட்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட மூன்று பிரதிவாதிகள் வழக்கு முடியும் வரை வெளிநாடு செல்ல தடை விதித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் அறிவித்துள்ளார்.
அதன் பின்னர், பிரதிவாதிகள் ஒவ்வொருவரையும் தலா 20,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறும், கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
எவ்வாறாயினும், குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் வெளிநாட்டுக்கு கடமைக்காக செல்ல விரும்பினால், நீதிமன்றத்தை நாடினால் அதனை பரிசீலிக்க தயார் என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை பிப்ரவரி 1-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
N.S