யாழ். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 294 பேர்வெள்ளத்தால் பாதிப்பு

Date:

யாழ். மாவட்டத்தில் 2 ஆயிரத்து 294 பேர்வெள்ளத்தால் பாதிப்புயாழ்ப்பாணம் மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த  முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தால் இதுவரை 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏழு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இரண்டு வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் மற்றும் இடி மின்னல் தாக்கத்தால் 5 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சங்கானைப் பிரதேச செயலர் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 641 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 18 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 145 குடும்பங்களைச் சேர்ந்த 494 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் 103 குடும்பங்களைச் சேர்ந்த 424 பேர் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்>’ – என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...