இன்று முதல் செப்டம்பர் அஸ்வெசும

0
174

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாதத்திற்கான கொடுப்பனவுகளை இன்று(23) முதல் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

13,77,000 பயனாளிகள் குடும்பங்களுக்காக 8,571 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான கொடுப்பனவுகளை வருட இறுதிக்கு முன்பாக செலுத்திமுடிக்கவுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அஸ்வெசும திட்டத்திற்காக புதிதாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனிடையே முதியோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் அங்கவீனமடைந்தோருக்கான கொடுப்பனவுகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here