உள்ளூராட்சி சபைத் தேர்தல் விரைவில்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதுடன் சிலர் நாட்டை விட்டு வெளியேறியும் உள்ளனர்.

புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளோம்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் திகதி தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...