விபத்தில் இருவர் பலி

Date:

குளியாப்பிட்டிய, ஹெட்டிபொல வீதியில் கம்புராபொல பாலத்திற்கு அருகில் குளியாப்பிட்டியவிலிருந்து ஹெட்டிபொல நோக்கிச் சென்ற ஜீப் வண்டியொன்று புல்கமுவ ஓயாவில் பாய்ந்ததில் இன்று (23) காலை விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிரேன் உதவியுடன் ஆற்றில் வீழ்ந்த ஜீப் வண்டியை மேலே இழுத்ததில் வாகனத்தில் சிக்கிய இருவர் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்திருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 27 வயதுடைய குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரும் சகோதரர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

விபத்து இடம்பெற்ற இடம் வளைவுகள் நிறைந்த இடம் எனவும்,  வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் உள்ள ஓடையில் விழுந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் குளியாப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தூங்கிக் கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு

பாணந்துறை - ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் இன்று (ஜூலை...

அரசாங்கம் எவ்வாறு முகம் கொடுக்கப்போகிறது? கடைப்பிடக்கப்போகும் கொள்கை யாது? அரசாங்கத்தின் பதில் என்ன?

ஐக்கிய அமெரிக்க குடியரசு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி...

இரு முக்கிய பாதாள குழு தலைவர்கள் கைது?

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்டதாகக் கூறப்படும் கெஹல்பத்தர பத்மே மற்றும்...

நிஷாந்த ஜெயவீர எம்பியாக சத்தியபிரமாணம்

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிஷாந்த...