மாதிவேல வீட்டுத் தொகுதியில் 35க்கும் மேற்பட்ட புதிய எம்.பி.க்கள் வீடு கோரி விண்ணப்பம்

Date:

இந்த வருடம் புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் 35க்கும் மேற்பட்டோர் மாதிவெல வீட்டுத் தொகுதியிலிருந்து உத்தியோகபூர்வ வீடமைப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அந்த வீடுகளில் தற்போது திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 3ஆம் திகதி முதல் விண்ணப்பித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய வீடுகள் வழங்கப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

கொழும்பில் இருந்து 40 கிலோ மீற்றர்களுக்குள் வீடு இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் வீடுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும், அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த வீடுகள் வழங்கப்படும் என நாடாளுமன்ற சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

மாதிவெல எம்பி உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் 110 வீடுகள் உள்ளன.

இதேவேளை, 09வது பாராளுமன்றத்தின் முன்னாள் எம்.பி.க்கள் மாதிவெல எம்.பி உத்தியோகபூர்வ வீடமைப்புத் தொகுதியின் வீடுகளில் பொதுத் தேர்தல் நடைபெறும் கடந்த (14ம் திகதி) வரை மாத்திரம் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வருட பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் எம்.பி.க்கள் மாத்திரமே இந்த வீட்டுத் தொகுதியில் தங்கக்கூடிய தகுதியுடையவர்கள் என நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....

மருந்து உற்பத்தி துறையில் புரட்சிகர மாற்றம்!

100 சதவீதம் இலங்கைக்குச் சொந்தமான மருந்து உற்பத்தி நிறுவனமான சினெர்ஜி பார்மாசூட்டிகல்ஸ்,...

மருத்துவமனைகளும் உணவகங்களும் தொற்றா நோய்கள் பரவும் மையங்களாக மாறிவிட்டன!

உணவுக் கட்டுப்பாட்டு வர்த்தமானிகளில் தாமதம் ஏற்படுவதால் பொது சுகாதாரம் ஆபத்தில் உள்ளது....