பயங்கரவாதத் தடை சட்டத்தின் ஊடாக எமது இனத்தை முடக்க பார்க்கின்றனர்

Date:

மட்டக்களப்பு முழுவதும் குடிநீர் கிடைக்க வழி செய்யும் உன்னிச்சை பிரதேச மக்களுக்கு குடிநீர் வழங்கப்படுமா? இதற்கான வசதிகளை ஏற்படுத்த நிதி ஒதுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன் வைத்தார்.

நேற்று (25) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீர் வழங்குதல் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

போரில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு மதிய உணவு வழங்கியதற்காக ஜனநாயக போராளிகளின் கட்சியின் துணைத் தலைவர் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டார்.

இந்த சட்டத்தை வைத்து எமது இனத்தினை முடக்க பார்க்கின்றார்கள். எமது இனத்துக்காக இனத்தின் விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் துயிலும் இல்லங்களை தரைமட்டமாக்க முயலும் இவ் அரசாங்கம் மற்றும் இனவாதிகள் எம்மவர்களின் கல்லறைகளை பார்த்து இன்றளவிலும் பயப்படுவது ஏன்.

மாவீரர்களின் சாபம் கோத்தபாயா அனுபவித்தது போல் தற்போதைய ஜனாதிபதி ரணில் அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. இவ் கார்த்திகை மாதம் எம்மவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் மாதமாகும். அஞ்சலி செலுத்துவதற்கு கூட இவ் நாட்டில் எமது இனத்துக்கு உரிமை இல்லையா? என தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரத்மலானையில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு

ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை...

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு

யாழ்ப்பாணம், தென்மராட்சி, கச்சாய் துறைமுகப் பகுதியில் நேற்று (24) இரவு 7:30...

இன்றைய வானிலை நிலவரம்

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும்...

ஜகத் விதானவுக்கு கொலை மிரட்டல்

சமகி ஜன பலவேகய களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான...