விளையாட்டுத்துறை, நீர்ப்பாசன மற்றும் இளைஞர் விவகார அமைச்சுப் பொறுப்பில் இருந்து உனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரொஷான் ரணசிங்க நீக்கப்படுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட கடிதம் மூலம் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடல்கள் நடைபெற்ற பின்னரே இந்த தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார்.