29ஆம் திகதிவரை அவதானமாக இருக்கவும்

Date:

நாட்டின் பெரும்பாலான நில மற்றும் கடல் பகுதிகளில் நீடிக்கும் கடுமையான வானிலையைக் கருத்தில் கொண்டு, வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கான எச்சரிக்கையையும் கண்காணிப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது.

பொதுமக்கள் நவம்பர் 29ஆம் திகதி வரை மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் தென் கிழக்கு திசையிலிருந்து வட மேற்கு திசை நோக்கி நகரும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் மிகக் கனமழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-60 கிலோமீற்றராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், காற்றின் வேகமானது மணிக்கு 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கடற்பகுதிகளில் தென் கிழக்கு முதல் வட கிழக்கு வரையான பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம். இதனால் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.

காலி, களுத்துறை, கொழும்பு, புத்தளம் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில், கடல் அலைகளின் உயரம் சாதாரண நிலையை விட 2.5 முதல் 3.5 மீட்டர் வரை உயரும் அபாயம் காணப்படுகிறது.

கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயரமான அல்லது அபாயகரமான சரிவுகளில் வசிப்பவர்கள் விசேட அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மக்கள் தமது பாதுகாப்புக் குறித்து உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு

சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நாட்டின் இரண்டு பகுதிகளுக்கு மண்சரிவு அபாய...

இலங்கையில் 19.4 சதவீத மக்களுக்கு மன அழுத்தம்

இலங்கையில் வாழும் மொத்த மக்கள் தொகையில்  ஐந்தில் ஒரு பகுதியினர், அதாவது...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...