பதில் பொலிஸ் மா அதிபராக தேஷ்பந்து தென்னகோன்

0
208

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இன்று (29) நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிஓபி 28 மாநாட்டிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்வதற்கு முன்னர் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதும் அது தொடர்பான நடவடிக்கைகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக பதவியேற்பது 3 மாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியின் பதவிக்காலத்தை அதிகபட்சமாக 3 வருடங்களுக்கு மட்டுப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

அதன்படி,  பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரி அன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குள் 60 வயதை எட்டவில்லை என்றால், மேற்கண்ட முடிவு அந்த அதிகாரிக்கு பொருந்தும். பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தற்போது அதிக தகுதி பெற்றுள்ள பெரும்பாலான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 50 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here