மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தடை!

Date:

மருதங்கேணி பாலம் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்துக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்ட செயலர் ம.பிரதீபன் அறிவித்துள்ளார்.

யாழ். மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த நிலைமை காரணமாக மருதங்கேணி பாலத்தின் இரு புறங்களும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதனால் பாலத்தின் ஊடாக கனரக வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பாலம் மேலும் சேதமடையாத வகையில்  பாலத்தின் இரு புறங்களிலும் தற்போது மண் மூடைகள் அணைக்கப்பட்டுள்ளன.

விரைவில் பாலம் புனரமைக்கப்பட்ட பின்னர் கனரக வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று யாழ். மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...