மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் லண்டினில் விசேட நினைவேந்தல் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் பங்கேற்று உயிர்நீத்த தமது உறவுகளை உணர்வுப்பூர்வமாக நினைவுக்கூர்ந்ததுடன், அவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலியும் செலுத்தினர்.
புலம்பெயர் தமிழர்கள் ஒவ்வொரு ஆண்டு தாம் வாழும் நாடுகளில் மாவீரர் தின நிகழ்வை அனுஷ்டித்து வருகின்றனர். இம்முறையும் பிரித்தானியா, கனடா, பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தினர்.
இதில் லண்டனில் நடைபெற்ற நிகழ்வில் திரண்ட தமிழர்கள், இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் நீதியான விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தியதுடன், தமிழ் மக்களுக்கான நீதி சர்வதேச ரீதியில் நிலைநாட்டப்படுவதன் தேவையையும் வலியுறுத்தினர்.
இங்கையில் தமிழ் மக்களின் இருப்பை தீர்மானிக்க சர்வதேச நீதி அவசியமானதும் என்றும் சமகாலத்தில் ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து மனித உரிமைகளை நேசிக்கும் மேற்கத்திய நாடுகள் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.