ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த நேர்காணல்கள் நாளை முதல் சிறிகொத்த கட்சியின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்காக இந்த நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படவுள்ளதுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தலைமையிலான குழு தகுதியானவர்களை தெரிவு செய்யும்.
தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
N.S