நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சீனா வழங்கிய மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 14 வகையான அத்தியாவசிய மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 24ஆம் திகதி சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வதந்திகள் பரவுவது தொடர்பில் இன்று சபையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
N.S