வாழ்க்கைச் சுமையையும், கல்விச் சுமையையும் குறைக்க அரசை வற்புறுத்தி, அரசுக்கு எதிராக பெண்களை அணி திரட்டுவோம். என்ற தொனிப்பொருளில் இன்று (30) காலை பாராளுமன்ற சுற்றுவட்ட தியத்த உயனவுக்கு அருகில் கவனயீர்ப்புப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பெண்கள் உரிமை அமைப்பினர் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்ட பதாகைகளை ஏந்தியவாறும், போர் வண்ண கோஷங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.











