பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று(30) முதல் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன.
விடுமுறை தினங்களிலும் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவார்கள் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர், சட்டத்தரணி ஷாந்த நிரிஎல்ல தெரிவித்தார்.