துறைமுக பொது ஊழியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

Date:

எதிர்வரும் வாரம் முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சம்பளம் முறையாக உயர்த்தப்படவில்லை எனக் கூறி போராட்டம் நடத்தப்படவுள்ளது.

ஒக்டோபர் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் தீர்மானத்தின் பிரகாரம் துறைமுக ஊழியர்களுக்கான கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக வழங்கப்படவிருந்த சம்பள அதிகரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக துறைமுக ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை துறைமுக ஊழியர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் நேற்று (29ம் திகதி) அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் துறைமுக தலைவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...