காலநிலையில் மாற்றம்

Date:

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையின் தாக்கம் இன்று படிப்படியாக குறையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நிலவும் ஆழமான காற்றழுத்த தாழ்வுநிலையானது, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நேற்று (28) இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கிலோ மீற்றர் தொலைவிலும் காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கிலோ மீற்றர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர அதிக வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்படி, நாட்டின் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வட மாகாணத்தில் சில இடங்களில் அதிகபட்சம் 100 மில்லி மீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்று முதல் பஸ்களைச் சேவையில்

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின்...

அரச அலுவலகங்கள் இன்று திறப்பு

அரச அலுவலகங்கள் இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுநாள்...

வயிற்றுக்குள் 1 கோடி ரூபாய் கொக்கெய்ன்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுமார் 1 கோடி ரூபாய் பெறுமதியான...

மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை மீண்டும் 100...