சா/தர பெறுபேறுகள் வெளியானது

0
67

2023(2022) கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக பார்வையிட முடியுமென பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை மே 29 ஆம் திகதி 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், குறித்த பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அவர்களில், 3 இலட்சத்து 94,450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here