யாழ். சென்ற ரயில் மீது கல் வீச்சுத் தாக்குதல்

Date:

நேற்று வியாழன் (30) இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு ரயில் கோண்டாவில் பகுதியைக் கடந்த போது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசியுள்ளனர்.

பயணிகளின் புகார்களைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்பு சேவை அதிகாரிகள் உடனடியாக சோதனை மேற்கொண்டனர்.

சந்தேக நபர்கள் ஏற்கனவே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஒரு பெட்டியில் உள்ள கண்ணாடி சேதமடைந்துள்ளது.

ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், பொறுப்பான நபர்களை அடையாளம் காண முடியவில்லை என்றும் பொலீசார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகரின் தனிப்பட்ட செயலாளர் மீது லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் புகார்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் தனிப்பட்ட செயலாளர் சமீர கல்லாகே, ஒரு புகாரில்...

12 பேருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பு

பொலன்னறுவை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது...

அமரகீர்த்தி கொலை வழக்கின் தீர்ப்பு இன்று

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

மேலதிக வகுப்பு, கருத்தரங்க, செயலமர்வு நடத்த தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை...