லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையை மாற்றியமைக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்.
22,000 மெட்ரிக் தொன் எரிவாயு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 100,000 விநியோகிக்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.