Tuesday, May 21, 2024

Latest Posts

தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை: சஜித் விசனம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் அதிபரருக்கு அவ்வாறான அதிகாரங்கள் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/ 2கீழ் நேற்று (01) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, பல்வேறு உபாயங்களை கையாண்டு தேர்தலை ஒத்திவைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க முயற்சி செய்து வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில், “எல்லை நிர்ணய குழுக்களை நியமித்தல்,நிதியில்லை எனக் கூறுவது,தேர்தல் நடத்தப்படக் கூடாது என்று நீதிமன்றத்திற்கு செல்வது,தேர்தல் திணைக்கள அதிகாரிகளை அதிபர் அழைப்பது,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மூலம் கட்டுப்பணங்கள் ஏற்றுக்கொள்வதை நிறுத்துவது, அமைச்சரவை தீர்மானங்களை எடுப்பது போன்ற செய்ற்பாடுகளை அதிபர் முன்னெடுத்தார்.

அதுமட்டுமல்லாமல், தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான வரைவுகளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது,தேர்தலை நடத்தினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது போகும் எனக் கூறுவது, தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களை பதவி விலகக் கோருவது மற்றும் பதவி விலக கட்டாயப்படுத்தல் போன்ற பல்வேறு உபாயங்களை கையாண்டு தேர்தலை ஒத்திவைக்க அதிபர் முயன்றார்.

மேலும் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற நிலையிலும் அவர்களுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை.

அவர்கள் கடமையாற்றும் நிறுவனங்களுக்குச் செல்லக் கூட அனுமதிக்கப்படுவதில்லை தரம் குறைந்த உரங்களை இறக்குமதி செய்யவும், நட்புவட்டார நண்பர்களுக்கு கோடிக்கணக்கான வரிச்சலுகைகளை வழங்கவும் அரசாங்கத்திடம் பணம் இருந்தால், தேர்தலை நடத்த ஏன் பணம் இல்லை?

சூழ்ச்சிகரமான உபாயங்கள்
உள்ளூராட்சி மன்றங்கள் நிறுவப்படாத நிலையில், அரசாங்க தரப்பில் உள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கப்படும் பணத்தைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை தயாரித்துள்ளனர்.

இதுபோன்ற சூழ்ச்சிகரமான உபாயங்களை கையாளுவதை தவிர்க்க வேண்டும்” என எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.