எதிர்காலத்தில் வைத்தியர் ஆவதே இலச்சியம்; யாழ். சாதனை மாணவி பெருமிதம்

0
138

எதிர்காலத்தில் வைத்தியர் ஆகுவதே தனது இலச்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்ற யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த மாணவி அக்சயா அனந்தசயனன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார்.

“சாதாரணதர பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றதில் தமிழ் இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. பெறுபேற்றை கல்வி நடவடிக்கையில் ஒரு படிக்கல்லாகவே பார்க்கிறேன்.

உயிரியல் கற்கையை தெரிவு செய்து மருத்துவ பீடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே எனது இலட்சியம். பெற்றோருக்கும், பாடசாலை சமூகத்தினருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

விஞ்ஞான பாடத்திற்கும், ஆங்கிலம், சிங்களம் ஆகிய தொகுதி பாடங்களுக்குமே தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்றேன். கணித பாடத்தை தரம் ஆறு முதல் தந்தையிடமே கற்றேன்.

இந்நிலையில், சாதாரண தர மாணவர்கள் சாதாரண பரீட்சையை உயர்தரத்திற்கான சிறு வழிகாட்டாலாக கருதி எதிர்கொள்ள வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் கணித விரிவுரையாளராகவும் தாய் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றனர்.

இதேவேளை, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையைச் சேர்ந்த அக்சயா அனந்தசயனன் 9ஏ பெறுபேறுகளை பெற்று தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.

மேலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரியின் 115 மாணவிகள் 9ஏ பெறுபேற்றை பெற்றுள்ளனர்.

8 ஏ பெறுபேற்றை 59 பேரும், 7 ஏ பெறுபேற்றை 22 பேரும் பெற்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தர கல்லூரி தமிழ் மொழி மூலமான பெறுபேற்றின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here