மற்றுமொரு சொகுசுக் கப்பலான அசமாரா குவெஸ்ட் நேற்று 600க்கும் அதிகமான சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
முக்கியமாக 16 நாட்களில் அமெரிக்காவிலிருந்து மூன்றாவது சொகுசுக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
இது நாட்டின் சுற்றுலா துறையின் மறுமலர்ச்சியைக் குறிக்கிறது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியின் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தி கடல்சார் சுற்றுலா மற்றும் சொகுசு பயணிகள் கப்பல் வருகையை ஊக்குவிக்க சுற்றுலா அமைச்சு திட்டமிட்டுள்ளது.
இலங்கைக்கு இயற்கையால் ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து பொருட்களும் சுற்றுலா வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. கடல்சார் சுற்றுலாவை ஒரு சிறப்பு அம்சமாக மேம்படுத்துவதில் இலங்கை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
அசமாரா குவெஸ்ட் என்பது ஆர்-கிளாஸ் பயணக் கப்பலாகும், இது 24 அக்டோபர் 2007 அன்று அசமாரா பயணக் கப்பல்களுக்காக சேவையில் நுழைந்தது.
அசமாரா குவெஸ்ட் சுமார் 710 பயணிகளையும் மற்றும் 410 பணியாளர்களையும் கொண்டு செல்கிறது. இந்தக் கப்பல் நேற்று கொழும்பில் நங்கூரமிடப்பட்டது. நாளை திங்கட்கிழமை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செல்லவுள்ளது.
2000 பார்வையாளர்களை ஏற்றிய முந்தைய சொகுசுக் கப்பல் கடந்த நவம்பர் 29ஆம் திகதி இலங்கைக்கு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
N.S