தேசிய விளையாட்டு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார்.
அதன் புதிய தலைவராக டொக்டர் மையா குணசேகர நியமிக்கப்பட்டார்.
முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க இதற்கு முன்னர் இதன் தலைவராக கடமையாற்றினார்.
தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.