பிரபாகரனுக்கு நிகராக எவருமே வர முடியாது; கமல் குணரத்ன

0
224

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிகராகத் தமிழர்கள் தரப்பில் இனி எவருமே வர முடியாது என முன்னாள் இராணுவ அதிகாரியும் தற்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மாவீரர் தினமன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வி பேசுவதாக வெளியான காணொளி தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது, “தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா பேசுவதாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி வெளியான வீடியோ போலியானது.

அந்தப் போலி காணொளிக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கும் என்று என்னால் கூற முடியாது. அதேவேளை, தொடர்பு இல்லை என்றும் என்னால் கூற முடியாது.

இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களின் ஒரு குழு திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளது என்பது நூறு வீதம் உண்மை.

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிப் போரில் தலைவர் பிரபாகரனும் அவரின் குடும்பத்தினரும் உயிரிழந்து விட்டனர், அவர்களை வைத்து இனி எவரும் அரசியல் செய்ய முடியாது. அது அவர்களை அவமானப்படுத்தும் செயல்.

தலைவர் பிரபாகரனின் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அவர் நேர்மையான ஒரு தலைவர், இறுதி வரைப் போராடிய ஒரு தலைவர்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here