ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ தடுத்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு மகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ மற்றும் ‘எச்’ அறைகளில் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது 33 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 35 சிம் அட்டைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆயர் ஜெரோம் பெர்னாண்டோ அண்மையில் மெகசின் சிறைச்சாலையின் ‘ஜி’ வார்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் (02) இரவு இந்த திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் மற்றும் சிம்கார்டுகள் தொடர்பில் சிறைச்சாலை திணைக்களம் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கையடக்க தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகளை பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.