சம்மாந்துறையில் பின்தங்கிய பிரதேசத்தில் வசிக்கும் 238 குடும்பங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் காணி அனுமதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களான அதாவுல்லா மற்றும் முஷாரப் ஆகியோரின் ஏற்பாட்டில் காணி அனுமதிப்பத்திரம் மற்றும் மானியங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்த மக்களின் கோரிக்கை பல வருடங்களாக நிலுவையில் இருந்து வந்த நிலையில் முன்னுரிமை அடிப்படையில் உடனடி நடவடிக்கையுடன் நிறைவேற்றப்பட்டதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.













