21 தமிழக மீனவர்கள் கைது

Date:

ந.லோகதயாளன்

இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 4 படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்று காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்  கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி உடபுகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களும் ஒரு படகும் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கைதான 13 மீனவர்களும் மூன்று படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு  அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அழுத்தம் கொடுத்து வலுக்கட்டாய வாக்குமூலம்

விசாரணை நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அழுத்தம்...

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...