வரவு – செலவுத்திட்டம் மீது இன்று இறுதி வாக்கெடுப்பு ; பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அரசரதரப்பு முஸ்தீபு!

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதியமைச்சரென்ற வகையில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி சபையில் சமர்ப்பித்து வரவு செலவுத் திட்டம் மீதான உரையை ஆற்றினார்.

அதனைத்தொடர்ந்து வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம்மதிப்பீடு மீதான விவாதம் 15 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையிலான 07 நாட்கள் நடைபெற்றன. அதனையடுத்து 22 ஆம் திகதி மாலை 6.00மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

அந்த வாக்கெடுப்பில் வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகளும் எதிராக 84 வாக்குகளும் அளிக்கப்பட்டன.இந்நிலையிலேயே இன்று இறுதி வாக்கெடுப்பு நடைபெறுகின்றது. வரவு – செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள அரசரதரப்பு பெரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...

மே மாதத்தில் தேசிய பணவீக்கம் 5.4% ஆக உயர்வு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், 2026 மே மாதத்தில்...