இலங்கைக்கு இந்தியாவின் பொருளாதார ஆதரவு எந்தொரு நலனையும் கொண்டதல்ல!

Date:

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை என்றால், இந்தியா தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது என அர்த்தம். ஆனால், இந்தியா இவ்வாறு இல்லை. அண்டைய நாடுகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் எமது கொள்கை அமைந்துள்ளது. இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவு எப்போதும் உள்ளது என இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு இந்தியா வழங்கிய பொருளாதார ஆதரவு முழு நாட்டிற்கும் உரியது அன்றி எந்தவொரு இனவாத அணுகுமுறையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை.

பாலஸ்தீனப் பிரச்சினையில், இரு நாடுகளும் அருகருகே அமைதியாக வாழ்வதன் மூலம், இரு நாடுகளின் தீர்வுக்காக இந்தியா துணை நிற்கிறது.

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை குறித்து எஸ்.ஜெய்சங்கரிடம் நாடாளுமன்றில் ம.தி.மு.க உறுப்பினர் வைகோ விளக்கம் கேட்டிருந்தார்.

இலங்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவையின் வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர், குழந்தைகள் கொல்லப்பட்டனர், இலங்கைக்கு அப்போதைய அரசு ஆயுதம் கொடுத்தது, இன்னும் இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக உள்ளது என்று வைகோ கூறினார்.

ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில் இருந்து இந்தியா விலகியிருப்பது நீண்ட கால நிலைப்பாட்டிற்கு இணங்குவதாகவேயாகும். முந்தைய அரசாங்கங்களும் இலங்கையில் தமிழ் சமூகத்தின் நலன்களை மேம்படுத்துதல் என்பது எமது அணுகுமுறையாகத் தொடர்கிறது என்றார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ரகித, சரித் இருவரும் ஜூலை 3ம் திகதி வரை விளக்கமறியலில்

பாதாள உலக தலைவன் "ஹரக் கடாவிற்கு" வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக, அவரது...

கொழும்பில் இரு முக்கிய புள்ளிகள் கைது

முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும்...

வெனிசுவேலா நிலநடுக்கம் – பலர் பலி

வெனிசுவேலாவின் தலைநகரான கராகஸில் சில வினாடிகள் இடைவெளியில் இரண்டு பெரிய நிலநடுக்கங்கள்...

அஸ்வெசும நலத்திட்டத்தில் மாற்றம்

இனி வரும் காலங்களில் அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, ஏழை மற்றும்...