களுத்துறை ரைகம் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலகவை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் திருக்கேஷ் செல்லசாமி, ஜீவந்தராஜா, மாக்ரட் மற்றும் தோட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
ரைகம் தோட்ட பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கவனம் செலுத்துமாறு செந்தில் தொண்டமான் மேல்மாகாண ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மக்களின் பாதுகாப்பிற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக மேல்மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார்.