தல்பே வடக்கு, ஹபராதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த நபரை அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டுவிட்டு வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தல்பே வடக்கு பகுதியில் விடப்பட்டு சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் மாத்தறை நாவிமன பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய ஹபராதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.