புதிய அரசியல் கூட்டணி – அர்ஜுன ரணதுங்க அறிவிப்பு

0
90

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

ஊழல், மோசடி செய்பவர்கள் இல்லாத புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா கிரிக்கட்டில் இடம்பெற்றுள்ள மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு தெரியப்படுத்த சென்ற போதே ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். கிரிக்கெட் நிர்வாகத்திற்கு வருவதற்கு ரணதுங்க பல தடவைகள் முயற்சித்தும் அது தோல்வியடைந்ததுடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் நியமிக்கப்பட்ட இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவின் காரணமாக அதன் செயற்பாடுகளை அவரால் ஆரம்பிக்க முடியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here