கஜேந்திரகுமார் – செல்வம் கிளிநொச்சியில் சந்திப்பு!

Date:

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரெலோவின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பியை நேற்று செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதன்போது தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைவு மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.  

அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை அடுத்து, இனிவருங்காலங்களிலேனும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி ஒன்றுபட்டுப் பயணிக்க வேண்டும் என்ற விடயம் பல்வேறு தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாகக்கொண்டு ஏனைய தமிழ்த் தேசியக்  கட்சிகளுடன் பேச்சுகளை நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாக அண்மையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, இது பற்றிக் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி., ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. ஆகியோர் இந்தத் தீர்வுத் திட்ட முன்மொழிவு குறித்தும், அதற்கு அப்பாலும் பேச்சு நடத்துவதற்குத் தாம் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் சிறீதரன் எம்.பியை அவரது யாழ். இல்லத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் எம்.பி., புதிய அரசமைப்பு உருவாக்கத்தில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியம், அதனை முன்னிறுத்திய அடுத்தகட்ட நடவடிக்கைகள், தமிழ் மக்கள் பேரவையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்ட வரைவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

அதேபோன்று செல்வம் அடைக்கலநாதன் எம்.பியையும் நேற்று சந்தித்து மேற்படி விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார் கஜேந்திரகுமார் எம்.பி.

கிளிநொச்சியில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் பங்கேற்றிருந்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசியலமைப்புக்கு முரணான ரணில் விக்கிரமசிங்கவின் கைது…?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும்...

ரணில் தெரிவித்துள்ள நன்றி

தனது வீட்டிலிருந்து வீடியோ இணைப்பு மூலம் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி...

CID அழைப்பில் திடீர் திருப்பம்

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாக...

முழு இரத்த நிற சந்திர கிரகணம் செப்டம்பரில்

இலங்கை மற்றும்  பல நாடுகளுக்குத் தெரியும் முழு இரத்த நிற சந்திர...