இலங்கைக்கு கடத்த முற்பட்ட 20 மூடை கடல் அட்டை வேதாளையில் அகப்பட்டது.
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய 20 மூடை கடல் அட்டை தமிழகம் வேதாளையில் கியூப் பிரிவு பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து ஓர் படகில் 20 மூடை கடல் அட்டையை இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றிய சமயமே தமிழகப் பொலிசாரால் பிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு பொலிசார் சென்ற சமயம் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
இதனையடுத்து கடல் அட்டையினையும் படகினையும் கியூப் பிரிவு பொலிசார் கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கைக்கு கடத்த முற்பட்ட 3 ஆயிரம் கிலோ பீடி இலை இந்திய கரையோர காவல் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து ஓர் வத்தையில் 3 ஆயிரம் கிலோ பீடி இலை கடத்தும்போதே இவைபிடிபட்டுள்ளது.
இவற்றை படகில் கடத்திய ஆறுபேரும் இந்திய கரையோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்டவர்களும் சான்று பொருட்களும் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளது.
