போலியாக பதிவு செய்யப்பட்ட 6,000 வாகனங்கள் பயன்பாட்டில்

Date:

வரி செலுத்தாமல் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6,000 வாகனங்கள் பயன்பாட்டில் இருப்பது குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காகவும் சுங்க வரிகள் மற்றும் ஏனைய கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இவற்றிற்கு ஒரு தீர்வாக வாகனத்தை கொள்வனவு செய்யும் நபர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது

இதன்மூலம், ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கப்படும் வாகனம் இலங்கைக்கு சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதா மற்றும் முறையான வரி செலுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளத

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...