COVID-19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
சீனா தனது கடுமையான “ஜீரோ-கோவிட்” கொள்கையை அகற்றி, வைரஸுடன் மக்களை வாழ அனுமதிக்கிறது. உலக பொருளாதாரம் தொற்றுநோய்களின் எழுச்சியை எதிர்கொள்கிறது.
சீனாவின் வுஹானில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி 6.6 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்ற கொரோனா வைரஸ் இன்னும் “சர்வதேச பொது சுகாதார அவசரநிலையை” (PHEIC) பிரதிபலிக்கிறதா என்பதை தீர்மானிக்க WHO நேற்றுமுன்தினம் கூடியது.
இதன்போதே அடுத்த ஆண்டு உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாதிருக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெட்ரோஸ் கூறியுள்ளார்.
N.S