மருத்துவர்களின் ஓய்வு வயது குறித்து வெளியானது விசேட வர்த்தமானி!

Date:

மருத்துவர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பல் சத்திரசிகிச்சை நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை திருத்தும் இடைக்கால விதிகளுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டது.

அதன்படி, மருத்துவ ஆலோசகர்கள், அரசு மருத்துவ அலுவலர்கள், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அரசாங்கத்தின் பதிவு செய்யப்பட்ட மருத்துவ அலுவலர்களின் கட்டாய ஓய்வு வயது கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி திருத்தப்பட்டுள்ளது.

• ஏற்கனவே 63 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், டிசம்பர் 31, 2022க்கு முன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 62 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 63 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 61 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அதிகாரிகள், 62 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 60 வயதை பூர்த்தி செய்த மருத்துவ அலுவலர்கள், 61 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

• ஏற்கனவே 59 வயதை பூர்த்தி செய்துள்ள மருத்துவ அதிகாரிகள், 60 வயது முடிந்தவுடன் ஓய்வு பெற வேண்டும்.

எவ்வாறாயினும், ஜனவரி 01 முதல் ஜூன் 30 வரையில் ஓய்வு பெறும் வயதினர் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும். ஜூன் 30 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும்.

அதேபோன்று ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்குள் ஓய்வு பெறும் வயதினர் டிசம்பர் 31 வரை பணியாற்ற அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹாவில் நாளை 12 மணிநேர நீர் தடை

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (07) 12 மணி நேர...

அதிகாலை துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று (ஜூன் 06) அதிகாலை நடந்த துப்பாக்கிச்...

இதுவரை 37 மனித எலும்புக்கூடுகள் மீட்பு

செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 37 மனித...

எஸ்.எம். சந்திரசேன விளக்கமறியலில்

முன்னாள் அமைச்சர் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் 2015 ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ரூ....