சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பெறுமதி சேர் வரி(VAT) (திருத்த) சட்டமூலத்தின் சான்றிதழை நேற்று (14) அங்கீகரித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் திருத்தங்களுடன் அண்மையில் (09) பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனால் சட்டமூலத்திற்கான இரண்டாம் வாசிப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 82 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, 2022 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க மதிப்புக்கூட்டு வரி (திருத்தம்) சட்டமாக, டிசம்பர் 14 ஆம் திகதி முதல், பெறுமதி சேர் வரி (திருத்தம்) சட்டமூலம் நடைமுறைப்படுத்தப்படும் என நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
N.S