ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதப்படை உறுப்பினர்கள் அனைவரும் அடுத்த வாரம் முதல் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இது பொதுப் பணத்தை வீணடிக்கும் செயற்பாடு எனவும் அமைச்சர் கூறினார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்த முடிவுகள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு செய்த பிறகு எடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.