ஐந்து சிறுமிகள் துஷ்பிரயோகம், பாதிரியார் கைது

Date:

கிருலப்பனை பிரதேசத்தில் குறிப்பிட்ட மத சபையினால் நடத்தப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் ஐந்து சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் 63 வயதுடைய பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விடுதி பதிவு செய்யப்படாதது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்தார்.

2020 முதல் 9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர் என்று அந்த அதிகாரி கூறினார்.

5 சிறுமிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப பொலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பான விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாராளுமன்றில் எதிர்க்கட்சி சுயாதீன அணி

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும்போது எதிர்க்கட்சி ஒன்று சுயேச்சையாக செயற்படப் போவதாக...

உதய கம்மன்பில விரைவில் கைது

வழக்கறிஞர் அச்சல செனவிரத்ன தாக்கல் செய்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற...

ஓமந்தை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி

வவுனியா, ஓமந்தை A9 வீதியில நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில்...

மலேசிய திருமுருகன் ஆலயத்தில் செந்தில் தொண்டமான் வழிபாடு

மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணனின் அழைப்பின் பேரில் மலேசியாவுக்கு...