இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு (டிசம்பர் 17) இலங்கை திரும்பினார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
இங்கு அவர் இந்திய ஜனாதிபதி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு, நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மற்றும் பிற உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டதுடன் புத்த கயாவிற்கு சென்றார்.
வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த உள்ளிட்ட குழுவினர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் இந்த விஜயத்தில் இணைந்தனர்.