ஆங்கில ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு

0
45

மேல் மாகாணத்தில் இன்னும் 4000 ஆசிரியர் வெற்றிடங்கள் இருப்பதாக மாகாண முதலமைச்சு கூறுகிறது. அவற்றில் ஆங்கிலம், தமிழ், தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்கள் தொடர்பான ஆசிரியர்களின் பற்றாக்குறை கடுமையாக இருப்பதாக மேல்மாகாண பிரதம செயலாளர் தம்மிகா விஜேசிங்க தெரிவித்தார்.

ஆங்கில வழியில் பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு தீர்வாக பல முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இதன்படி, பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களில் இளங்கலைப் பட்டதாரிகள் குழுவொன்று கற்பித்தலுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதுடன், தற்போது பாடசாலைகளில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்றையும் அவர்களின் தகைமையின் அடிப்படையில் ஆசிரியர் பணிக்காக இணைத்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த 3900 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் மேல் மாகாண ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here